Monday, April 30, 2012

உஸாமாவின் குடும்பத்தை சந்தேகிக்க வேண்டாம்: சவூதி அரேபியா!


Osama bin Laden's family arrives in Saudi Arabia
ரியாத்:அல்காயிதா தலைவர் உஸாமா பின் லேடனின் குடும்ப உறுப்பினர்களை சந்தேகிக்க காரணம் எதுவும் இல்லை என்று சவூதி அரேபியா தெரிவித்துள்ளது. குடும்ப உறுப்பினர்கள் ஏதேனும் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று சவூதி அரேபியாவின் செய்தி நிறுவனம் கூறுகிறது.
பாகிஸ்தானில் இருந்து நாடுகடத்தப்பட்டு நேற்று முன்தினம் உஸாமாவின் குடும்பம் சவூதி அரேபியாவுக்கு வருகை தந்தது. உஸாமாவின் குடும்பத்தை வரவேற்றது மனிதநேயத்தின் அடிப்படையில் ஆகும். இவர்களது எதிர்காலத்தை குறித்து தற்பொழுது விவாதிப்பது உகந்தது அல்ல என்று சவூதி அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் கூறுகிறது.

No comments:

Post a Comment