பக்கங்கள்

Sunday, April 8, 2012

இஃவானின் கைராத் அல் ஷாத்திர் வேட்புமனு தாக்கல்


இஃவானின் கைராத் அல் ஷாத்திர் வேட்புமனு தாக்கல்
கெய்ரோ:எகிப்தில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் அரசியல் கட்சியான எஃப்.ஜே.பியின் வேட்பாளர் கைராத் அல் ஷாத்திர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களின் முழக்கங்களுடன் தேர்தல் கமிஷன் தலைமையகத்திற்கு வந்த ஷாத்திர் தனது பெயரை பதிவுச்செய்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை ஒப்படைக்க மறுக்கும் ராணுவ அரசின் முடிவை எதிர்த்து, முன்னதாக அதிபர் பதவிக்கு போட்டியிடமாட்டோம் என்ற நிலைப்பாட்டை இஃவான் மாற்றிக்கொண்டது. இதனைத் தொடர்ந்து கைராத் அல் ஷாத்திர் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதனிடையே, ஸலஃபி கட்சியான அந்நூர் சார்பாக அதிபர் தேர்தலுக்கு போட்டியிடவிருக்கும் ஷேக் ஹாஷிம் அபூ இஸ்மாயிலை தகுதி இழக்கச் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. அபூ இஸ்மாயிலின் தாயார் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளதால் அவர் தகுதியிழக்கும் வாய்ப்புள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment