பக்கங்கள்

Wednesday, April 11, 2012

பொய் வாக்குமூலம் அளிக்க ஏ.டி.எஸ் சித்திரவதை: முஸ்லிம் இளைஞர் நீதிமன்றத்தில் புகார்!


பொய் வாக்குமூலம் அளிக்க ஏ.டி.எஸ் சித்திரவதை- முஸ்லிம் இளைஞர் நீதிமன்றத்தில் புகார்மும்பை:2011 ஆம் ஆண்டு ஜூலை 13-ஆம் தேதி 27 நபர்களின் மரணத்திற்கு காரணமான மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்த நதீம் ஷேக்(வயது 23) என்ற முஸ்லிம் இளைஞர் பின்வாங்கியுள்ளார்.
மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படை(ஏ.டி.எஸ்) அதிகாரிகள் கட்டாயப்படுத்தியதை தொடர்ந்து செய்யாத குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொண்டேன் என்று நதீம் சிறப்பு மஹராஷ்ட்ரா திட்டமிட்ட குற்ற கட்டுப்பாட்டு சட்ட நீதிமன்றத்தில் ஆவணம் மூலம் புகார் அளித்துள்ளார்.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இன்னொரு முஸ்லிம் இளைஞர் ஹாரூன் ரஷீத் நாயக்(வயது 35) ஏ.டி.எஸ் தன்னை கஸ்டடியில் வைத்து சித்திரவதைச் செய்ததாக நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.
கைது செய்யப்பட்ட நான்கு நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளையில் ஏ.டி.எஸ் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. நான்கு பேரின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 23-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் துவக்கத்தில் கைதான நகீ அஹ்மத் ஷேக் ஏற்கனவே ஏ.டி.எஸ் மீது குற்றம் சாட்டியிருந்தார். டெல்லி போலீஸின் இன்ஃபார்மராக செயல்பட்ட நகீயின் கைது ஏ.டி.எஸ் மற்றும் டெல்லி போலீஸுக்கு இடையே சச்சரவை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment