Sunday, April 8, 2012

சிரியாவில் மோதல் உச்சக்கட்டம்: துருக்கியை நோக்கி புலன்பெயரும் மக்கள் வெள்ளம்!


Syrian refugees inside Syria move close to the Turkish
டமாஸ்கஸ்/அங்காரா:ஐ.நா-அரபுலீக் மத்தியஸ்தர் கோஃபி அன்னன் பரிந்துரைத்த சமாதான திட்டத்திற்கான கால அவகாசம் முடியப்போகும் வேளையில் சிரியாவில் எதிர்ப்பாளர்கள் மீது அந்நாட்டின் அராஜக ராணுவம் கடுமையான தாக்குதல்களை நடத்திவருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து சிரியாவில் இருந்து மக்கள் அயல்நாடான துருக்கியை நோக்கி கூட்டத்தோடு புலன் பெயர்ந்து வருகின்றனர்.
புலன்பெயரும் மக்களின் எண்ணிக்கை தற்போது போல தொடருமானால் சர்வதேச உதவி தேவைப்படும் என்று ஐ.நாவுக்கு துருக்கி கோரிக்கை விடுத்துள்ளது. இதனை துருக்கி வெளியுறவு துறை அமைச்சர் தாவூத் ஓக்லு கூறியுள்ளார்.
சிரியாவில் போராட்டம் துவங்கியதில் இருந்து 24 ஆயிரத்திற்கும் அதிகமானோர் துருக்கிக்கு புலன் பெயர்ந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment