பக்கங்கள்

Thursday, April 26, 2012

மத அடிப்படையிலான கட்சிகளுக்கு லிபியாவில் தடை!

mohammed‑al‑harizy

திரிபோலி:ஜூனில் தேர்தல் நடைபெறவிருக்கும் லிபியாவில் மத அடிப்படையிலான கட்சி உருவாக்குவதற்கு அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.
நம்பிக்கை, இனம், கோத்திரம் ஆகியவற்றின் அடிப்படையிலான கட்சிகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று அரசு செய்தி தொடர்பாளர் முஹம்மது அல் ஹாரிஸி கூறினார். இதுத்தொடர்பான சட்டம் அரசுக்கு தலைமை வகிக்கும் நேசனல் ட்ரான்சிசனல் கவுன்சில் நிறைவேற்றியுள்ளது. ஆனால், முன்னரே துவக்கப்பட்ட கட்சிகளுக்கு இச்சட்டத்தால் பாதிப்பு ஏற்படுமா? என்ற கேள்விக்கு ஹாரிஸி பதிலளிக்கவில்லை.
இஃவானுல் முஸ்லிமீனுக்கு இந்த அறிவிப்பு பின்னடைவாகும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

No comments:

Post a Comment