பக்கங்கள்

Thursday, April 26, 2012

நேர்முகத் தேர்வில் முதலிடம் பிடித்த இளைஞருக்கு பணி இல்லை – மேற்கு வங்கத்திலும் முஸ்லிம்கள் ஓரம் கட்டப்படும் அவலம்


Sahidullah
கல்கத்தா:இந்தியாவில் பல்வேறு சந்தர்பங்களில் பாரபட்சமாக நடத்தப்படும் சமூகம் முஸ்லிம்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதனை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் விதமாக தற்போது மேற்குவங்க மாநிலம் மல்டா மாவட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள முஸ்லிம் இளைஞருக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் அரசு வேலை மறுக்கப்பட்டு அதற்கு பதிலாக அவரை விட பின்தங்கிய நிலையில் இருந்த முஸ்லிம் அல்லாத ஒருவருக்கு அந்தப் பணி வழங்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கான நேர்முகத் தேர்வில் முஸ்லிம் இளைஞர் முதல் இடத்தை பிடித்தும் சுகாதாரத்துறையின் தலைமை அதிகாரி ஸ்வபன் குமார் தேர்வில் கடைசி இடத்தை பிடித்த ஒருவருக்கு பணி வழங்கப்பட்டதாக அறிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 2011-ம் ஆண்டு மாவட்ட சுகாதாரத்துறை கணினி உதவியாளர் பணிக்கு ஒருவரும் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு 17  நபர்கள் தேவைப்படுவதாக விளம்பரம் அளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து மல்டா மாவட்டத்தைச் சேர்ந்த சாஹிதுல்லா என்பவர் கணினி உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து சாஹிதுல்லாவுக்கு கடந்த மார்ச் 14_ஆம் தேதி அன்று சுகாதாரத்துறையின் தலைமை அதிகாரி அலுவலகத்திற்கு தட்டச்சு திறனை நிரூபிப்பதற்காக வருமாறு அழைப்பு வந்தது. அதில் சாஹிதுல்லா உட்பட 5  பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர் இந்தத் தேர்வில் சாஹிதுல்லா முதல் இடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் நேர்முக தேர்விற்குப் பின்னர் கடைசி இடத்தை பிடித்த சஞ்சிப் கர் தாஸ் என்பவர் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
மேலும் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டவர்களில் சாஹிதுல்லா மட்டுமே முதுகலை பட்டம் பெற்றவர் மேலும் அவருக்கு மாநில சுகாதாரத் துறைகளில் தற்காலிமாக பணிபுரிந்த அனுபவமும் உண்டு.
தனக்கு அநீதி இழைக்கப்பட்டதைத் தொடர்ந்து மல்டா மாவட்ட நீதிபதியிடமும் மேற்கு வங்க முதல்வரிடமும் புகார் சாஹிதுல்லா அளித்துள்ளார். மேலும் மாநில சிறுபான்மை கமிசனுக்கும் புகார் அனுப்ப முடிவு செய்துள்ளார்.
மல்டா மாவட்டத்தில் 52% சதவீத முஸ்லிம்கள் இருந்தும் மேலும் ஓபிசி  கோட்டாவில் முஸ்லிம்களுக்கு 10% ஒதுக்கப்பட்டும் ஒரு முஸ்லிமிற்கு கூட பணி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment