Sunday, April 8, 2012

மருமகனுக்கு வழங்கிய சீட்டை திரும்ப பெற டெல்லி ஷாஹி இமாம் கோரிக்கை!


Azam Khan, Shahi Imam Lash Out At Each Other
லக்னோ:தனது மருமகன் உமர்கானுக்கு சமாஜ்வாதி கட்சி வழங்கிய சட்டப்பேரவை தொகுதிக்கான சீட்டை திரும்ப பெறுமாறு கட்சி தலைவர்  முலாயம்சிங் யாதவிற்கு எழுதிய கடிதத்தில் டெல்லி ஷாஹி இமாம் புகாரி கூறியுள்ளார்.
முஸ்லிம்களின் நல்வாழ்விற்காக சமாஜ்வாதி கட்சி ஒன்றும் செய்யவில்லை என்று சுட்டிக்காட்டிய இமாம், தான் தனது மருமகனுக்காக சீட் கேட்கவில்லை என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்களின் நல்வாழ்விற்கும், முன்னேற்றத்திற்கும் தீவிரமாகவும், நம்பிக்கையுடனும் செயல்பட வேண்டும் என்று அவர் கடிதத்தில் கூறியுள்ளார். மூத்த எஸ்.பி தலைவர் ஆஸம் கானின் விமர்சனத்திற்கும் இமாம் புகாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment