Wednesday, April 11, 2012

மோடியின் மோசடிக்கு பதிலடி கொடுக்க காங்கிரஸ் தயார்!


டைம் இதழின் கணக்கெடுப்பில் மோடி மோசடிஅஹ்மதாபாத்:2012 டிசம்பர் மாதம் வரவிருக்கும் குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல், 2014 பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் கனவு ஆகியவற்றை குறிக்கோளாக கொண்டு தனது பயங்கரவாத முகத்தை மறைக்க சைபர் உலகில் நரேந்திரமோடி மேற்கொண்டு வரும் மோசடிக்கு எதிராக பதிலடி கொடுக்க காங்கிரஸ் கட்சி தயாராகியுள்ளது.
மோடிக்கு ஆதரவாக உண்மைகளை குழி தோண்டி புதைத்துவிட்டு மோசடித்தனமாக அட்டைப்பட கட்டுரையை வெளியிட்ட பிரபல டைம் இதழ் தற்போது தனது ஆன்லைன் சர்வே மூலம் உலகின் டாப் 100 சக்தி வாய்ந்த மனிதர்களை தேர்வு செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது.இதற்காக குஜராத் அரசின் பல்வேறு இணைய தளங்களில் இருந்து பொதுமக்களுக்கு நூற்றுக்கணக்கான இமெயில்களை முதல்வர் மோடி அனுப்பியுள்ளார். அதில் டைம் இதழின் ஆன்லைன் கணக்கெடுப்புக்கு தனக்காக வாக்களிக்கும்படி கேட்டு கொண்டுள்ளார். உலகில் எந்த தலை வரும் மோடியை போன்று செய்ததில்லை. இதெல்லாம் டைம் இதழின் பட்டியலில் வரவேண்டும் என்ற சாதாரண காரணத்திற்காகதான் என்று ஏற்கனவே குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் மோட்வாடியா கூறியிருந்தார்.டைம் இதழின் ஆன்லைன் சர்வேயில் துவக்கத்தில் முதலிடத்தில் இருந்த மோடி தற்பொழுது பின்தங்கியுள்ளார்.
“டைம்’ பத்திரிகையில் மோடிக்கு ஆதரவாக இதுவரை 2,56,792 வாக்குகளும் எதிராக 2,66,684 வாக்குகளும் விழுந்துள்ளன. ஆதரவாக விழுந்த வாக்குகளில் பெரும்பாலானவை குஜராத்திலிருந்து விழுந்தவை. எதிராக பல மாநிலங்களிலிருந்து விழுந்துள்ளன.
மோடிக்கு ஆதரவான வாக்குகளை திரட்டுவதில் அவரது பாசிச ஆதரவாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில் மோடிக்கு எதிரான வாக்குகளை திரட்டுவதில் காங்கிரஸ் கட்சியும் களம் இறங்கியுள்ளது.மேலும் சிறுபான்மை அமைப்புகள், மனித உரிமை அமைப்புகளும் மோடிக்கு எதிரான வாக்குகளை பதிவுச்செய்கின்றனர்.
டைம் இதழின் உலகில் சிறந்த 100 மனிதர்களில் ஒருவராக பாசிச பயங்கரவாதியான மோடி தேர்வு செய்யப்படுவாரா இல்லையா என்பது ஏப்ரல் 17-ம் தேதிக்குப் பிறகு தெரிந்துவிடும். கருத்து தெரிவிக்க அன்றுதான் கடைசி நாள்.
மோடிக்கு எதிராக வாக்களிப்பதற்காகவும் அவருடைய பிரசாரத்தை முறியடிப்பதற்காகவும் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலேயே தனி சைபர் பிரிவு தொடங்கப்பட்டிருக்கிறது. இது தினசரி காலை 10 மணிக்கு வேலையைத் தொடங்கி இரவு 8 மணி வரை இடைவிடாமல் வேலை செய்துவருகிறது. மாநிலத் தலைமையகத்தில் மட்டும் அல்லாமல் மாவட்ட வாரியாகவும் மோடி எதிர்ப்புப் பிரசாரத்தில் ஈடுபடுமாறு கட்சியின் அமைப்புகளுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோட்வாடியா கட்டளையிட்டு ஒருங்கிணைத்து வருகிறார்.
மோடியின் மோசடித்தனமான பேச்சு, சாதனை போன்ற ஏமாற்றுவித்தைகளுக்கு புள்ளிவிபரங்களுடன் தக்க பதிலடி கொடுக்க பிரச்சார உத்தியை காங்கிரஸ் வகுத்துள்ளது.
மோடியின் ஆட்சியில் நிகழும் லஞ்ச லாவண்யங்கள், திட்ட அமலில் உள்ள ஊழல்கள், குளறுபடிகள், சட்டம் – ஒழுங்கு அமலில் உள்ள குளறுபடிகள், மோடி ஆட்சியின் ஊதாரித்தனமான செலவுகள் ஆகியவற்றைப் பட்டியலிட்டு அவரது மோசடியை முறியடிக்கும் முயற்சியில் குஜராத் பிரதேச காங்கிரஸ் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது என்று கட்சியின் பத்திரிகைத் தொடர்பாளர் மணீஷ் தோஷி தெரிவித்தார்.
இந்நிலையில் குஜராத் இளைஞர்களிடம் மோடியின் ஆட்சிச் சிறப்பை(?) எடுத்துக்கூற இணையதளங்கள், டுவிட்டர், பேஸ்புக் என்று எல்லா வழிகளையும் பயன்படுத்த நாங்களும் தீர்மானித்துவிட்டோம் என்கிறார் மாநில பாரதிய ஜனதா கட்சியின் பத்திரிகைத் தொடர்பாளர் ஜகதீஷ் பவசார்.

No comments:

Post a Comment