பக்கங்கள்

Friday, March 16, 2012

ஈரானுடனாக உறவு குறித்து இஸ்ரேல் ஆதரவாளர்கள் தவறான பரப்புரை - இந்திய தூதரகம்


ஈரானிலிருந்து எந்தளவு கச்சா இறக்குமதி செய்தால் அமெரிக்காவின் பொருளாதாரத் தடையிலிருந்து தப்பிக்கலாம் என்ற அளவில் இந்தியா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகின்றன.
ஈரானிலிருந்து கச்சா இறக்குமதியைக் கைவிட்டு தங்கள் பிடியிலுள்ள சவுதி அரேபியா,ஈராக்கிடமிருந்து கச்சா இறக்குமதி செய்ய இந்த நாடுகளை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரகம், இது குறித்து கூறுகையில், சில இஸ்ரேல் ஆதரவு பிரச்சாரகர்கள் இந்தியாவுக்கும் ஈரானுக்கும் உள்ள பாரம்பரிய வர்த்தக உறவுகள் குறித்து தவறான செய்திகளை வெளியிட்டு வருவதாக தெரிவித்திருந்தது.

அமெரிக்காவிலுள்ள ஈரான் எதிர்ப்பு அணியினர் சர்வதேச எரிசக்தி முகமையிடைமிருந்து தகவல் பெற்று, இந்தியாவும்,தென் கொரியாவும் கடந்த ஜனவரி மாதம் ஈரானிலிருந்து கச்சா இறக்குமதியை அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளதைத் தொடர்ந்து அமெரிக்காவின் எரிச்சல் இந்தியாமீது திரும்பியுள்ளதற்கு இஸ்ரேல் ஆதரவாளர்களின் சதியே காரணம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment