
இம்பால்:மணிப்பூரில் சிறப்பு ராணுவ அதிகார சட்டத்தை வாபஸ் பெறக்கோரி கடந்த 11 ஆண்டுகளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் மனித உரிமை ஆர்வலர் இரோம் ஷர்மிளாவை போலீஸ் மீண்டும் கைது செய்துள்ளது. தற்கொலை முயற்சி வழக்கு அவர் மீது பதிவுச் செய்யப்பட்டுள்ளது. ஒரு வருடம் சிறைத்தண்டனை. அது பூர்த்தியாகும் வேளையில் மீண்டும் அவர் கைது செய்யப்படுவார்.
கடந்த 11 ஆண்டுகளாக உணவோ, தண்ணீரோ இன்றி போராட்டம் நடத்தும் ஷர்மிளாவின் உயிரை பாதுகாப்பதற்காக வலுக்கட்டாயமாக அவருடைய மூக்கின் வழியாக டியூப் மூலம் திரவ உணவு செலுத்தப்பட்டு வருகிறது.
ஒருவருட காலாவதி பூர்த்தியானதை தொடர்ந்து அடுத்த தினம் அவர் கைது செய்யப்பட்டார். ரிமாண்ட் செய்யப்பட்ட அவர் 15 தினங்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று(புதன்கிழமை) இரோம் ஷர்மிளாவின் பிறந்த தினமாகும்.
No comments:
Post a Comment