
ஜெருசலம்:காஸ்ஸாவில் இஸ்ரேல் தற்போது நடத்தி வரும் அக்கிரம தாக்குதலுக்கு காரணம், புரட்சிக்கு பிந்தைய எகிப்தின் நிலைப்பாட்டை அறிவதற்கான முயற்சி என்று பிரபல ஃபலஸ்தீன் ஊடகவியலாளரும், அரசியல் நோக்கருமான பஷர் ஸெஃதான் கூறுகிறார்.
எகிப்தில் முபாரக்கின் தலைமையிலான ஆட்சி நடந்தபோது நிலவிய இஸ்ரேல் ஆதரவு சூழல் தற்போது இல்லை. ஆகையால் ஃபலஸ்தீனை தாக்கும்போது அரபுலகம் அதிலும் குறிப்பாக எகிப்து தலைமை எவ்வாறு பதில் அளிக்கும் என்பதை அறிவதற்காக ராணுவ தாக்குதலை இஸ்ரேல் உபயோகிப்பதாக ஸெஃதான் கூறியுள்ளார். முபாரக்கை பதவியில் இருந்து அகற்றிய பிறகு எகிப்தில் அமெரிக்க-இஸ்ரேல் எதிர்ப்பு உணர்வு வலுவடைந்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment