பக்கங்கள்

Saturday, March 17, 2012

ஃபலஸ்தீன் கைதிகளை அவமதிக்க கூடாது: இஸ்ரேல் நீதிமன்றத்தில் மனு!


டெல்அவீவ்:ஃபலஸ்தீன் சிறைக்கைதிகளை அவமானப்படுத்தும் விதமாக அவர்களின் டி.என்.ஏ மாதிரிகளை எடுக்க கூடாது என்று இஸ்ரேல் நீதிமன்றத்தில் ஃபலஸ்தீன் ஆணையம் மனு அளித்துள்ளது.
ஃபலஸ்தீன் சிறைக்கைதிகளின் விவகார ஃபலஸ்தீன் ஆணைய அமைச்சர் இஸ்ஸா கராக்வா ராமல்லாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
வடக்கு இஸ்ரேலில் உள்ள ஷிதா சிறையில் ஃபலஸ்தீன் கைதிகளை கட்டாயப்படுத்தி டி.என்.ஏ சாம்பிள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. சிறைக் கைதிகளின் முடிகளை பறித்தும், வாயை ஒற்றி எடுத்தும், பற்களை பறித்துதும் முன்னர் சர்ச்சையை கிளப்பியிருந்தது.
சர்வதேச சட்டங்களை மீறிய இந்நடவடிக்கை சட்டவிரோதமானது என ஃபலஸ்தீன் ஆணையம் இம்மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது.
இஸ்ரேல் சிறை அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து அறிக்கையை வெளியிடவேண்டும் என்று ஃபலஸ்தீன் ஆணையம் உலக சுகாதார அமைப்பிற்கு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், அனைத்து சிறைக்கைதிகளின் டி.என்.ஏ மாதிரிகளை சேமிக்கும் ஒரு பகுதியாகத்தான் இந்நடவடிக்கை என்று இஸ்ரேல் கூறுகிறது. பரிசோதனைகளின் முடிவை இஸ்ரேல் போலீஸ் தலைமையகத்தில் ஃபயல் செய்யும் என்று துறைச்செய்தி தொடர்பாளர் மிக்கி ரோஸன்ஃபெல்ட் கூறுகிறார்.
பாலியல் பலாத்கார வழக்கில் ஏழு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்ட இஸ்ரேல் முன்னாள் அதிபர் மோசே கட்சேவின் டி.என்.ஏ மாதிரியும் சேகரிக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.

No comments:

Post a Comment