
புதுடெல்லி:ஓட்டுப்போட லஞ்சம் பெற்ற வழக்கில் குற்றவாளியான பாகன் சிங் குலஸ்தேவுக்கும், ஆதர்ஷ் ப்ளாட் ஊழலில் தொடர்புடைய அஜய் சஞ்சேடிக்கும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு பா.ஜ.க தேர்வுச் செய்துள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழலுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வரும் பா.ஜ.க, 2008-ஆம் ஆண்டில் நடந்த ஓட்டுக்கு லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் பா.ஜ.க எம்.பி பாகன் சிங் குலஸ்தேவுக்கும், ஆதர்ஷ் ப்ளாட் ஊழலில் சிக்கிய சஞ்சேதிக்கும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியை வழங்கியுள்ளது.
அணுசக்தி ஒப்பந்தத்தின் பெயரால் 2008 ஜூலை 22-ஆம் தேதி பாராளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க லஞ்சம் அளிக்கப்பட்டதாக கூறி பணக்கட்டுக்களை உயர்த்தி காட்டி 3 பா.ஜ.க எம்.பிக்கள் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். பின்னர் இதே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஜாமீனில் வெளியே வந்த குலஸ்தே மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி பதவிக்கு போட்டியிடுகிறார். ஆதர்ஷ் ப்ளாட் ஊழலில் சிக்கிய அஜய் சஞ்சேடி மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுகிறார். ஊழல் குற்றச்சாட்டு இருந்தபோதும் சஞ்சேடி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பா.ஜ.க சார்பாக நிறுத்தப்படுவதற்கு காரணம், பா.ஜ.க தலைவர் நிதின் கட்காரிக்கு நெருக்கமானவர் என்பதாகும்.
மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் அருண் ஜெட்லி, பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றவாளியான வினய் கத்தியார் உள்ளிட்ட 12 பேரை நேற்று பா.ஜ.கவின் மத்திய கமிட்டி மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவித்தது. வருகிற 6 காலி இடங்களுக்கான வேட்பாளர்களை தேர்வுச்செய்யும் பொறுப்பை நிதின் கட்கரிக்கு மத்திய கமிட்டியின் கூட்டம் அளித்துள்ளது.
No comments:
Post a Comment