பக்கங்கள்

Sunday, March 18, 2012

ஆளில்லா விமானம் ஈரான் தயாரிப்பு!


Iran unveils home-built combat drone
டெஹ்ரான்:உள்நாட்டு தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஈரான் பொறியாளர்கள் புதிய ஆளில்லா(ட்ரோன்) விமானத்தை தயாரித்துள்ளனர். இவ்விமானம் 50 கிலோமீட்டர் சுற்றளவில் 15 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் திறன் வாய்ந்தது ஆகும். இத்தகவலை இத்திட்டத்திற்கு தலைமை வகித்த ஏரோநாட்டிகல் என்ஜினியர் ரஸா தனாந்தெ ஹக்கம் அபாத் தெரிவித்துள்ளார்.
பட்டாம்பூச்சி என்ற பொருள் தரும் ஷபாரக் என்ற பெயர் இவ்விமானத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள காமெராக்களின் உதவியுடன் பூமியில் காட்சிகளை படமெடுத்து அதனை ராணுவத்திற்கு அனுப்பவும் இவ்விமானத்தால் இயலும் என்று ஹக்கம் அபாத் கூறினார்.
ராணுவ தேவைகளுடன் எல்லை ரோந்து, போக்குவரத்து கண்காணிப்பு ஆகிய தேவைகளுக்கும் இவ்விமானம் பயன்படும் என்று ஹக்கம் அபாத் கூறுகிறார்.

No comments:

Post a Comment