பக்கங்கள்

Sunday, March 18, 2012

அமெரிக்காவிடமிருந்து ஈரான் மீண்டும் கோதுமை இறக்குமதி!


Iran buys U.S. wheat again
டெஹ்ரான்:அமெரிக்காவில் இருந்து ஈரான் 60 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதிச் செய்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. ஈரான் மீது தடையை தீவிரப்படுத்தியுள்ளதாக அமெரிக்கா தொடர்ந்து கூறிவரும் வேளையில் இரு நாடுகளுக்கு இடையேயான கோதுமை வர்த்தகம் மீண்டும் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு முதல் தடவையாக ஈரான் அமெரிக்காவிடமிருந்து கோதுமையை இறக்குமதிச் செய்துள்ளதாக அமெரிக்க தானிய வர்த்தக அதிகாரிகளை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் துவக்கத்தில் மேலும் 22 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை ஈரானுக்கு ஏற்றுமதிச்செய்யப்படும். கூடுதல் தானியங்கள் ஏற்றுமதிச் செய்ய ஈரானுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
16 கோடி டாலர் மதிப்பிலான தானியங்களை அமெரிக்கா ஈரானுக்கு ஏற்றுமதிச் செய்கிறது. தானிய ஏற்றுமதி நிறுவனங்களான கார்கில், பங்க் ஆகியன இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன. மூன்று வருடங்களுக்கு முன்பும் இந்நிறுவனங்கள் கோதுமையை ஈரானுக்கு ஏற்றுமதிச் செய்தன. அப்பொழுது ஈரான் 18 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதிச் செய்திருந்தது.

No comments:

Post a Comment