Thursday, March 29, 2012

சஞ்சீவ் பட்டிற்கு ஆதரவான தீர்ப்பை தடை செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு!


Sanjiv Bhatt
புதுடெல்லி:சஸ்பெண்ட் செய்யப்பட்ட குஜராத் மாநில மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டிற்கு ஆதரவாக குஜராத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
1990-ஆம் ஆண்டில் கஸ்டடி மரண வழக்கு தொடர்பாக சஞ்சீவ் பட்டிடம் விசாரணை நடத்துவதற்கு தடை விதித்த உயர்நீதிமன்ற உத்தரவிற்கு நீதிபதிகளான பி.சதாசிவம், பி.எஸ்.சவுகான் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் தடைவிதிக்க மறுத்துவிட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவின் நகலை மனுதாரர் ஆஜர்படுத்தாததால் அவரது கோரிக்கையை நீதிமன்றம் தள்ளுபடிச் செய்ததாக சஞ்சீவ் பட்டின் வழக்கறிஞர் இக்பால் ஸயீத் கூறினார். இம்மனு அடுத்தமாதம் மீண்டும் விசாரணைக்கு வரும்.

No comments:

Post a Comment