பக்கங்கள்

Monday, March 12, 2012

ஷஹ்லா மஸூத் கொலை வழக்கு:பா.ஜ.க எம்.எல்.ஏ உதவியாளரிடம் விசாரணை!


ஷஹ்லா மஸூத்
போபால்:தகவல் அறியும் உரிமை ஆர்வலர் ஷஹ்லா மஸூதின் கொலைவழக்கு தொடர்பாக பாரதீயஜனதா கட்சியின் எம்.எல்.ஏ த்ரூவ் நாராயணன் சிங்கின் உதவியாளர் பாண்டேவிடம் சி.பி.ஐ 3 மணிநேரம் விசாரணை நடத்தியது. பாண்டேயை சி.பி.ஐ அலுவலகத்திற்கு அழைத்து இவ்விசாரணையை நடத்தியது.
ஷஹ்லா மஸூத், பா.ஜ.க எம்.எல்.ஏ இடையேயான தொடர்பை குறித்து சி.பி.ஐ அதிகாரிகள் பாண்டேவிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் இடையே சந்திப்பை நடத்தியதை தான் காணவில்லை என்று பாண்டே கூறியதாக சி.பி.ஐ கூறியுள்ளது.

No comments:

Post a Comment