பக்கங்கள்

Saturday, March 3, 2012

தீவிரவாத எதிப்பின் பெயரால் இந்தியாவில் செயல்படும் அமெரிக்க படை!


US special forces helping India
புதுடெல்லி:தீவிரவாதத்தை எதிர்கொள்ள இந்தியாவிலும் அமெரிக்க படையை நியமித்துள்ளதாகவும், தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்க படை இந்திய அரசுடன் இணைந்து செயல்பட துவங்கியுள்ளதாகவும் மூத்த அமெரிக்க ராணுவ கமாண்டர் கூறியுள்ளார்.
மிகவும் ஆபத்தானவர்களாக கருதப்படும் லஷ்கர்-இ-தய்யிபா போராளிகளை எதிர்கொள்வதுதான் இந்த ராணுவ ரீதியான ஒத்துழைப்புக்கு காரணம் என்று அமெரிக்காவின் பாகோம் கமாண்டர் அட்மிரல் ராபர்ட் வில்லார்ட் அமெரிக்க காங்கிரஸிடம் எழுத்து மூலமான வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பசிஃபிக் கமாண்டின்(பாகோம்)படைதான் தீவிரவாத எதிர்ப்பிற்காக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று ராபர்ட் வில்லார்ட் கூறியுள்ளார்.
அமெரிக்க காங்கிரஸ் நடத்திய விசாரணையில் வில்லார்ட் இந்தியாவுடனான தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை குறித்த தகவலை அளித்துள்ளார். மேலும் அவர் கூறியது:
தெற்காசியா அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எரிசக்தி உள்பட பல்வேறு வர்த்தக துறைகளில் பரிவர்த்தனை நடக்கும் இப்பிராந்தியத்தில் முக்கிய கடல் வழிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளன. அணு ஆயுதம் கைவசம் உள்ள இந்தியா-பாக். இடையேயான பகை உணர்வு, லஷ்கர்-இ-தய்யிபா போன்ற அமைப்புகளின் இருப்பு, அதிகரித்து வரும் போதைப்பொருள் கடத்தல், இருநாடுகள் இடையேயான எல்லை தகராறுகள், இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளை மையமாக வைத்து நடைபெறும் ஆயுத செயல்பாடுகள் ஆகியன தெற்காசியா பிராந்தியத்திற்கு கடுமையான சவால்களாகும். ஆகையால் இப்பிராந்தியம் முழுவதும் தீவிரவாதத்தை தடுப்பதற்கு இந்தியாவுடன் ராணுவ ரீதியாக ஒத்துழைப்பது இன்றியமையாதது ஆகும்.
தீவிரவாதத்தை தடுக்க இந்தியாவின் பலத்தை அதிகரிப்பதற்காக அமெரிக்க படை இணைந்து செயல்படுகிறது. கடல் வழி நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இத்துடன் இந்தியா, அமெரிக்க அரசுகளும் பரஸ்பரம் ஒத்துழைப்புடன் செயல்படுகின்றன. அமெரிக்காவின் பாதுகாப்பு ஏஜன்சி மட்டுமல்ல, இதர ஏஜன்சிகளும் இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும், ஆயுத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் இணைந்து செயல்படுகின்றன.
மும்பையில் தீவிரவாத எதிர்ப்பு படையினருக்கு பயிற்சி அளித்து அமெரிக்கா முழுவதும் அவர்களை பரஸ்பர தகவல் தொடர்பு நிகழ்ச்சியில் பங்கேற்க செய்யப்பட்டது. இவர்களுடன் தெற்காசியாவில் அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் இதர நாடுகளும் கலந்துகொண்டன. தற்போது இந்தியா மட்டுமல்லாமல் பங்களாதேஷ், இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகளிலும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு சிறப்பு படை நியமிக்கப்பட்டுள்ளது.
லஷ்கர்-இ-தய்யிபாவை எதிர்கொள்ள அமெரிக்காவும், இந்தியாவும் ஒத்துழைப்புடன் செயல்படுகின்றன. பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் லஷ்கர் மிகவும் ஆபத்தான அமைப்பாகும். இவ்வமைப்பின் செயல்பாடுகள் பாதுகாப்பானதாகவும், சர்வதேச அளவிலான நோக்கங்களும் உள்ளன. ஆதலால் லஷ்கரை தடுக்க இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் இணைந்து செயல்படுவது அத்தியாவசியமானது.
அமெரிக்க காங்கிரஸின் விசாரணை வேளையில் ‘லஷ்கர்- இ- தய்யிபாவை எதிர்கொள்ள எவ்வகையான முயற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது? என்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜோ வில்சன் கேள்வி எழுப்பினார்.

No comments:

Post a Comment