
கும்பகோணம்:கும்பகோணம் அருகே புதிதாக கட்டப்பட்டுப்பட்டு வந்த கட்டடத்தில் இருந்து 3 நாட்டு வெடி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
கும்பகோணத்தை அடுத்த தராசுரம் எலும்பிச்சங்கா பாளையத்தில் கஸ்தூரி என்பவர் புதிதாக வீடு ஒன்று கட்டி வருகிறார். கடந்த 3 மாதங்களாக அங்கு பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இந்த நிலையில், கட்டடத்தினை பார்வையிடச் சென்ற கஸ்தூரி, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடி குண்டுகளை கண்டுபிடித்தார். இதையடுத்து திருச்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட வெடி குண்டு நிபுணர்கள் குழுவினர், அந்த கட்டடம் முழுவதும் சோதனை நடத்தினர். பின்னர் கட்டடத்தில் இருந்து எடுக்கப்பட்ட 3 சக்திவாய்ந்த நாட்டு வெடி குண்டுகளையும், செயலிழக்கச் செய்தனர்.
No comments:
Post a Comment