Monday, March 12, 2012

சட்டவிரோத செயலில் ம.பி முதல்வர் சிவ்ராஜ் – திக்விஜய் சிங்


லக்னோ:மத்தியபிரதேச மாநிலத்தின் முதல்வர் சிவராஜ்சிங் சவுஹான் மற்றும் அம்மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஆகியோருக்கு அம்மாநிலத்தில் நடைபெறும் சட்டவிரோதமான செயல்களில் பங்கு உண்டு என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
ஐ.பி.எஸ் அதிகாரி நரேந்திர குமார், வயது 32 ,  இவர் பமோர் என்ற பகுதியில் துணை கோட்ட காவல் அதிகாரியாக பணியாற்றினார். ரம்பன்ட் பகுதியில் பா.ஜ.க தொண்டர்களுக்கு சம்பந்தப்பட்ட சட்ட விரோதமான கல் குவாரி உள்ளது. அந்த குவாரியை சேர்ந்த சிலர் இவரை வியாழன் அன்று மோரினா மாவட்டத்தில், ட்ராக்டர்ரில் அனுமதி இல்லாமல் குவாரியில் இருந்து கற்களை ஏற்றி வந்த போது, அதை பிடிக்க முற்பட்டபோது டிராக்டரால் ஏற்றிக் கொலை செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட காவல் துறை அதிகாரியின் குடும்பத்திற்கு, தனது வருத்தத்தை தெரிவித்த அவர், தான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சமையத்தில் நரேந்திர குமாரின் மனைவி அவர்கள் ராஜ்கர்ஹ் மாவட்டத்தில், வட்டாச்சியர் அதிகாரியாக பணி புரிந்தார், அப்போது பா.ஜ.க வைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினரால் அங்கிருந்து பணி மாற்றம் செய்யப்பட்டார். இந்த குவாரியை சரியான குத்தகை மற்றும் அங்கீகாரம் இல்லாததால் மாநில அரசுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்ப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்த சட்ட விரோத குவாரியில் முதலமைச்சரின் குடும்பத்தினருக்கும் மற்றும் அதிகமான பா.ஜ.க வின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சம்பந்தம் உண்டு என்பதற்கு தன்னிடம் ஏராளமான சாட்சிகள் இருப்பதாக தெரிவித்தார்.
நரேந்திர குமாரின் மரணம் வேண்டுமென்றே செய்யப்பட்ட கொலை அல்ல, விபத்தே என்று அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சர் உமா ஷங்கர் குப்தா கூறியது தன்னை சவுக்கால் அடித்தது போன்று இருந்தது என்றார். அந்த மனிதாபிமானம் இல்லாத அறிக்கைக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.
திக்விஜய்சிங் மற்றும் ஐக்கிய-ஜனதாதள் தலைவர் சரத் யாதவ் ஆகியோர் இந்த கொலையில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் மீதும், மாநிலத்தின் இயற்கை வளங்கள் திருட்டு போவதை தடுக்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment