
புதுடெல்லி:சுப்ரமணியம் சுவாமி தலைமையிலான ஜனதா கட்சி பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் டெல்லியில் எல்.கே.அத்வானியின் வீட்டில் வைத்து நடைபெற்றது.அப்பொழுது சுப்ரமணிய சுவாமியின் ஜனதா கட்சியையும் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள கூட்டணி கட்சி தலைவர்கள் தீர்மானித்தனர்.
“எங்கள் கூட்டணியில் இணைய சுப்பிரமணியன் சுவாமி மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார்’ என்று மூத்த பாஜக தலைவர் எஸ்.எஸ். அலுவாலியா கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சுப்ரமணிய சுவாமியின் கட்சியின் வரவால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.ஆனால், எவ்வித அடிப்படை கட்டமைப்பும், தொண்டர்களின் ஆதரவும் இல்லாத இக்கட்சியால் பா.ஜ.கவுக்கு எவ்வித ஆதாயமும் ஏற்படபோவதில்லை என்று கருதப்படுகிறது.அதேவேளையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்த வழக்குகளின் பெயரால் சுப்ரமணிய சுவாமியை பயன்படுத்தலாம் என்று பா.ஜ.க திட்டமிட்டிருக்கலாம்.
No comments:
Post a Comment