புதுடெல்லி:நீதி
குஜராத்தில் எப்பொழுது மலரும் என்பது குஜராத்தில் மிகப்பெரிய
கேள்விக்குறியாக மாறியுள்ளது என்று குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ்
நரேந்திரமோடியால் இடைநீக்கம் செய்யப்பட்ட மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ்
பட் கூறியுள்ளார்.
குஜராத் இனப்படுகொலை நிகழ்ந்து 10
ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி அன்ஹத் அமைப்பு சார்பாக டெல்லியில் நடந்த
நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார் அவர்.
அவர் கூறியது: ‘வெட்ககேடின் 10 வருடங்கள்
குஜராத்தில் கடந்து சென்றுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் குஜராத்தில்
ஜனநாயகத்திற்கான இடம் குறைந்துவிட்டது. அதிவேகமாக பாசிச மயமாகி வரும்
மாநிலம்தான் குஜராத். பயம் காரணமாக யாரும் அங்கே எதையும் வெளிப்படையாக
கூறுவதில்லை. நீதி எப்பொழுது மலரும் என்பது குஜராத்தில் மிகப்பெரிய
கேள்விக்குறியாக மாறியுள்ளது. குஜராத்தில் முஸ்லிம்களுக்கு நீதி கிடைப்பது
எளிதல்ல. எவ்வளவு காலம் ஆனாலும் நீதிக்கான போராட்டத்தை வெற்றி கிடைக்கும்
வரை தொடரவேண்டும்.
குஜராத்தில் வளர்ச்சியின் கதையை கூறி இதனை
முறியடிக்க மோடி முயற்சிக்கிறார். ஜெர்மனியில் ஆட்சிபுரிந்த ஹிட்லரின்
காலத்தில் நல்ல சாலைகள் இருந்தன. ரெயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் ஓடின.
ராவணனின் இலங்கையில் தங்கம் செழிப்பாக இருந்தது. அதைப் போலவே மோடியின்
குஜராத்தும்.
2002-ஆம் ஆண்டு நிகழ்ந்தது இந்து-முஸ்லிம்
கலவரம் அல்ல. ஒரு கூட்டம் திட்டமிட்டு முஸ்லிம்களை படுகொலைச்
செய்தார்கள்.’ இவ்வாறு சஞ்சீவ் பட் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சி.பி.எம்மின் பிருந்தா
காரட், பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட், ஹர்ஷ் மந்தர், அப்துல் காலிக்,
பிருந்தா க்ரோவர், ஸைதா ஹாமித், ஃபாரா நக்வி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
நிகழ்ச்சியில் பி.ஜி.ஜாதவேதன் நம்பூதிரி
மற்றும் ககன் ஸேத்தி ஆகியோர் குஜராத் இனப்படுகொலை குறித்து எழுதிய ‘லெஸ்ட்
வி ஃபர்கட் ஹிஸ்டரி’ என்ற நூலை நீதிபதி வர்மா வெளியிட்டார்.
No comments:
Post a Comment