
அஹ்மதாபாத்:குஜராத் இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கையை வெளியிடவேண்டும் என்று கோரும் முன்னாள் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாகியாவின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடிச் செய்துள்ளது.
சிறப்பு புலனாய்வுக்குழு, அறிக்கை தொடர்பான ஆவணங்களை இதுவரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என்று மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் எம்.எஸ்.பட் கூறினார்.
குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் கொடூரமாக கொலைச் செய்யப்பட்ட முன்னாள் காங். எம்.பி.இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரி, சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று அஹ்மதாபாத் மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அவரது மனுவை நேற்று(சனிக்கிழமை) விசாரித்த மாஜிஸ்ட்ரேட் எம்.எஸ்.பட் தனது தீர்ப்பில் கூறியதாவது: ‘இனப்படுகொலை தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் புலனாய்வுக் குழு சமர்ப்பித்த பின்புதான், அதன் அறிக்கையை வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, இப்போதைக்கு புலனாய்வுக் குழுவின் அறிக்கையை வெளியிட முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் நடந்த வாதத்தில் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி ஸாகியாவின் மனுவிற்கு சிறப்பு புலனாய்வு குழுவின் வழக்கறிஞர் ஆர்.எஸ்.எஸ்.ஜமாவூர் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அறிக்கை வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க எஸ்.ஐ.டிக்கு உரிமையில்லை என்று ஸாகியாவின் வழக்கறிஞர் கூறினார். நீதிமன்றத்தில் ஒரு ஆவணத்தை சமர்ப்பித்தால் அது பொதுவான ஆவணம் என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment