
புதுடெல்லி:கொலைச் செய்யப்பட்ட மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படை தலைவர்(ஏ.டி.எஸ்) ஹேமந்த் கர்காரே குறித்து தவறான தகவல்களை வெளியிட்ட ஆர்.எஸ்.எஸ் ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பின் அகில இந்திய தலைவர்(சர்சங்க் சாலக்) மோகன் பாகவத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஒரு தேசிய பத்திரிகைக்கு(ஹிந்துஸ்தான் டைம்ஸ்) அளித்த பேட்டியில் ‘ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்க நிர்பந்தம் அளிக்கப்படுவதாக’ ஹேமந்த் கர்காரே தன்னிடம் கூறியதாக மோகன் பாகவத் தெரிவித்திருந்தார்.
இவ்விவகாரத்தை தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார். அப்பொழுது நீதிமன்றம், ‘எவ்வாறு இத்தகையதொரு அறிக்கையை உங்களால் அளிக்க முடிகிறது. இது தேவையற்ற எவ்வித பலனும் இல்லாத கருத்து. விசாரணையை திசை திருப்பும் முயற்சியாகும்’ என்று கண்டனம் தெரிவித்தது.
லோகேஷ் சர்மா, தேவேந்திர குப்தா, அஸிமானந்தா, கமல் சவுகான் உள்ளிட்ட பிரபல் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுக்குறித்து தேசிய நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்தார் பாகவத். அப்பொழுது அவர், கொலைச் செய்யப்படுவதற்கு ஐந்து தினங்கள் முன்பு கர்காரே, தனக்கு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்ய நிர்பந்தம் அளிக்கப்படுவதாக கூறினார் என்று தெரிவித்தார். மேலும், இவ்வழக்குகளில் ஆர்.எஸ்.எஸ் காரர்களை சிக்கவைக்க அரசியல் சதித்திட்டம் நடந்துள்ளதாக குற்றம் சாட்டினார் பாகவத்.
மேலும் ஹேமந்த் கர்கரே 2006 மற்றும் 2008ல் நடந்த மலேகான், 2007 ல் நடந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பு மற்றும் 2007 ல் நடந்த மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு விசாரணையில் ஆர்.எஸ்.எஸின் ஒத்துழைப்பை கோரி தன்னிடம் வந்ததாகவும் பாகவத் தனது பேட்டியில் கூறியிருந்தார்.
மலேகான் குண்டுவெடிப்பு மூலம் இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்க்பரிவார பயங்கரவாதிகளின் சதியை வெளிக்கொணர்ந்தவர் ஹேமந்த் கர்காரே. இதன் மூலம் தனக்கு தொலைபேசி மூலமாக உயிருக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக கொலைச் செய்யப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தன்னிடம் கூறியதாக காங்கிரஸ் கட்சியின் அகில் இந்திய பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் கூறியிருந்தார். ஆனால், அத்தகைய தொரு சம்பவமே நடக்கவில்லை என்று கூறி ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்க்பரிவார இயக்கங்கள் திக்விஜய் சிங் அதற்கான ஆதாரத்தை வெளிடுமாறு சவால் விடுத்தன. ஆனால், தன்னை விமர்சித்த பா.ஜ.க தலைவர்களையும், மஹராஷ்ட்ரா உள்துறை அமைச்சரையும் வாயை அடைக்கும் விதமாக கர்காரே தன்னை கொலை செய்யப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தொலைபேசியில் உரையாடிய குரல் பதிவை வெளியிட்டார். இதன் மூலம் அடங்கிப்போன சங்க்பரிவார், தற்பொழுது சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பயங்கரவாத முகம் என்.ஐ.ஏ விசாரணையில் கூடுதலாக வெளிவரும் சூழலில் கர்காரே பேசியதாக நாடகம் ஆட துவங்கியுள்ளது.
No comments:
Post a Comment