பக்கங்கள்

Monday, March 5, 2012

இந்தியா:ஆசிரியர்களால் அவமானப்படுத்தப்படும் 80 சதவீத மாணவர்கள்!


s&t
புதுடெல்லி:இந்தியாவில் பள்ளிக்கூட ஆசிரியர்களால் 80 சதவீத மாணவர்கள் அவமானப்படுத்தப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இவர்கள் பலர் முன்னிலையில் மோசமாக அவமானத்திற்கு ஆட்படுத்தப்படுகின்றார்கள் என்று அந்த ஆய்வு கூறுகிறது.
தேசிய சிறுவர் உரிமை பாதுகாப்பு அமைப்பு(National Commission for Protection of Child Rights (NCPCR)) நடத்திய ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.
இவ்வமைப்பு 2009-10 கல்வியாண்டில் இந்தியாவின் 7 மாநிலங்களைச்சார்ந்த 6,632 மாணவர்களிடம் நடத்திய ஆய்வின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பது: ‘ஆய்வில் கலந்துகொண்ட 9 மாணவர்கள் மட்டுமே ஆசிரியர்கள் தங்களை ஒருபோதும் திட்டியது இல்லை என்று தெரிவித்துள்ளனர். மற்ற மாணவர்கள் அனைவரும் தாங்கள் ஆசிரியர்களால் மிகவும் மோசமாக நடத்தப்பட்டோம் என்று கூறியுள்ளனர். சக மாணவர்களின் முன்னிலையில் தங்களை ஆசிரியர்கள் மோசமாக திட்டுவதாகவும் மாணவர்கள் கூறுகின்றனர்.
ஆசிரியர்கள் பலமுறை தங்களை பிரம்பால் அடித்துள்ளனர் என்று 75 மாணவர்களும், தங்கள் கன்னத்தில் ஆசிரியர் பலமுறை அறைந்துள்ளார் என்றும் 69 மாணவர்களும் கூறியுள்ளனர். இதனால் தங்களுக்கு ஆசிரியர்கள் மீது வெறுப்பும், பள்ளிக்குச் செல்வதில் ஆர்வமின்மையும் ஏற்பட்டது என்றும் பெரும்பாலான மாணவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். 99.86 சதவீத மாணவர்கள் ஆசிரியர்களால் ஏதாவதும் ஒருவகையில் தண்டிக்கப்பட்டுள்ளனர். 81.2 சதவீத மாணவர்கள் ஆசிரியர்களால் மிகக்கடுமையான வார்த்தைகளால் திட்டப்பட்டுள்ளனர்.
மாணவர்களை மனரீதியாக புண்படுத்துவதும், உடல்ரீதியாகக் காயப்படுத்துவதும் இந்தியப் பள்ளிகளில் பெரும்பாலும் அன்றாட நிகழ்வாகவே உள்ளது.
ஒரு சில இடங்களில் மாணவர்களுக்கு மின்சாரம் மூலம் “ஷாக்’ கொடுப்பது போன்ற கொடூரமான சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
மாணவர்களை கடுமையாக தண்டிக்காமல் கற்பிப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை விரைவில் வெளியிட இருப்பதாகவும் தேசிய சிறார் உரிமை பாதுகாப்பு அமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் விரும்பி வரும் இடமாக பள்ளிகள் இருக்க வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment