Monday, March 12, 2012

அமெரிக்க ராணுவ வீரனின் வெறி: 17 அப்பாவி மக்கள் படுகொலை!


US soldier shoots 17 civilians dead in Kandahar
காபூல்:தெற்கு ஆப்கானிஸ்தானில் காந்தஹார் மாகாணத்தில் உள்ள பஞ்சாயி மாவட்டத்தில் அமெரிக்க ராணுவ வீரனின் வெறித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 17 சாதாரண மக்கள் கொலைச் செய்யப்பட்டுள்ளனர்.
சுயக் கட்டுப்பாட்டை இழந்த அமெரிக்க ராணுவ வீரன் சாதாரண மக்கள் மீது கண்மூடித்தனமாக சரமாரியாக சுட்டதாக நேரில் கண்ட சாட்சிகள் கூறுகின்றனர். ராணுவ தலைமையகம் அருகே உள்ள 3 வீடுகளில் நுழைந்த அமெரிக்க வீரன் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது வெறித்தனமாக சுட்டுத் தள்ளியுள்ளான். இச்சம்பவத்தில் 6 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
கொலைச் செய்யப்பட்டவர்களில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர்.
கடந்த மாதம் அமெரிக்க ராணுவத்தினர் வெறித்தனமாக புனித திருக்குர்ஆன் பிரதியை எரித்த சம்பவத்தை கண்டித்து நடந்த போராட்டத்தில் 41 பேர் மரணித்திருந்தனர். அமெரிக்க ராணுவத்தினர் மீதான தாக்குதலும் அதிகரித்தது.
இந்நிலையில் ஆக்கிரமிப்பு அமெரிக்க ராணுவ வீரனின் வெறித்தன செயல் மேலும் மக்களின் கோபத்தை கிளரும் என கருதப்படுகிறது. ராணுவ வீரனை கைது செய்துள்ளதாகவும், மிகவும் துக்ககரமான சம்பவத்தைக் குறித்து விசாரணையை துவக்கியுள்ளதாகவும் தனது வழக்கமான பாணியில் நேட்டோ அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment