
காபூல்:ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பு ராணுவத்தின் ஒரு அங்கமாக விளங்கும் துருக்கியின் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 12 ராணுவ வீரர்கள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.
காபூலுக்கு அருகே பக்ராமி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் தகர்ந்து வீழ்ந்தது. வீட்டின் கூரை மீது ஹெலிகாப்டர் தகர்ந்து வீழ்ந்ததாக மூத்த போலீஸ் அதிகாரியை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது. பலியானவர்களில் 4 பேர் சிவிலியன்கள் ஆவர்.
10 வருடங்களில் ஆப்கானில் துருக்கி ராணுவத்திற்கு ஏற்படும் மிகப்பெரிய பதிலடியாக இவ்விபத்து அமைந்துள்ளது. விபத்தை துருக்கி அரசு உறுதிச் செய்துள்ளது. ஹெலிகாப்டரை தாலிபான் போராளிகள் சுட்டு வீழ்த்தினார்களா? என்பது உறுதிச் செய்யப்படவில்லை. முன்னர் நடந்த இதைப்போன்ற ஹெலிகாப்டர்கள் வீழ்த்தப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் தாலிபான் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
1800 துருக்கி ராணுவத்தினர் நேட்டோ கூட்டணியில் இடம் பெற்று ஆப்கானில் பணியாற்றி வருகின்றனர். ஆனால் துருக்கி ராணுவம் நேட்டோவில் இடம்பெற்றுள்ள இதர நாடுகளை போல தாக்குதல்கள் நடத்துவதில்லை. அப்பாவிகளை கொல்வதில்லை. ஆனால், காபூல் மற்றும் அதன் சமீப பிரதேசங்களில் கண்காணிப்பிலும் மற்றும் புனரமைப்பு பணிகளிலும் துருக்கி ராணுவம் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment