அமெரிக்காவின் கைப்பாவை என்று வர்ணிக்கப்படும் ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கீமூன், காஸா பகுதிக்கு சென்றபோதும் அங்கு இஸ்ரேலியவதை முகாம்களில் வைக்கபட்டுள்ள கைதிகளின் உறவினர்களையும் ,இஸ்ரேலிய சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு நடவடிக்கையால் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களையும் சந்திக்க மறுத்துள்ளதுடன் அந்த வதையுறும் மக்களின் எந்த பிரதிநிதியையும் தான் கலந்து கொள்ளும் கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதியையும் மறுத்துள்ளார்.
இஸ்ரேலின் எல்லா மட்ட ரக அதிகாரிகளையும் சந்தித்த பான்கீ காஸா மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகளையும் சந்திக்க மறுத்துள்ளார் .இது பான்கீயின் அளவுக்கு மீறிய இஸ்ரேல் ,அமெரிக்க விசுவாசத்தை காட்டுவதாக விமர்சனம் எழுத்துள்ளது . நேற்று இஸ்ரேல் பலஸ்தீனத்தின் எல்லைப்பகுதியான காஸா பகுதிக்கு சென்று . காஸா பகுதியில், ஜப்பானின் நிதிஉதவியுடன் கட்டப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைக்க சென்ற அவர் அந்த பகுதி காஸா மக்களை சந்தித்து அவர்களின் வதைகள் பற்றி கேட்டவில்லை , அந்த மக்கள் எவ்வளவுதான் முயன்றும் பான்கீ தனது நிகழ்ச்சி நிரலில் எவருக்கும் இடம் வழங்கவில்லை என்று மக்கள் கொதிப்படைந்தனர் இதனால் அந்த எல்லை பகுதிக்கு சென்ற பான்கீயின் வாகனங்கள் மீது மக்கள் செருப்பு மற்றும் கற்களினால் வீசியுள்ளனர்அதை தொடந்து 50 பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டனர்.கடந்த வருடம் பான்கீமூன் காஸா எல்லை பகுதிக்கு சென்றபோது எந்த பலஸ்தீன் கைதிகளின் குடும்பத்தையோ அல்லது இஸ்ரேலின் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களையோ சந்திக்க மறுப்பு தெரிவித்ததுடன் இஸ்ரேலில் பலஸ்தீன போராளிகளால் கைது செய்யப்பட்டு இருந்த இஸ்ரேலிய சிப்பாயின் குடும்பத்தை சந்தித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
நன்றி:ourummah.org
No comments:
Post a Comment