
காஸ்ஸா:ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் இஸ்ரேல் ராணுவம் ஃபலஸ்தீன் இளைஞர் ஒருவரை சுட்டுக் கொன்றது. காயமடைந்து ரமல்லா மருத்துவமனையில் சிகிட்சைப் பெற்றுவந்த தலத் ரமீயா என்பவர் மரணித்தார் என்று ஃபலஸ்தீன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஃபலஸ்தீனில் அல் அக்ஸா மஸ்ஜிதுக்கு அருகே ஃபலஸ்தீனர்களும், இஸ்ரேலியர்களும் மோதிக் கொண்டனர். மஸ்ஜிதுக்கு அருகே வன்முறை கிளம்பியதையடுத்து கலந்தியா செக்போஸ்டிற்கு அருகே ஃபலஸ்தீன் மக்கள் திரண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ரமீயா கொல்லப்பட்டார்.
இஸ்ரேலிய போலீஸ் மஸ்ஜிதுக்குள் நுழைந்தது மோதலுக்கு காரணமானது. மோதல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை எதிர்கொள்ள ராணுவம் க்ரேனேடு உபயோகித்தது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருவதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment