பக்கங்கள்

Sunday, February 5, 2012

பிராட்லி மானிங்:ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை


bradley manning
வாஷிங்டன்:தூதரக,ராணுவ ரகசியங்களை விக்கிலீக்ஸ் இணையதளத்திற்கு ரகசியமாக கசியச் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ வீரர் பிராட்லி மானிங் மீது ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும். இச்செய்தியை அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது.
ராணுவ நீதிமன்றத்தில் விசாரணையின் தேதி நிச்சயிக்கப்படவில்லை. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மானிங்கிற்கு மரணம் வரை சிறைத் தண்டனை வழங்கப்படும் என கருதப்படுகிறது. ஈராக்கில் அமெரிக்க ராணுவ மையத்தில் ரகசிய புலனாய்வு பிரிவில் பகுப்பாய்வாளராக(Analyst)பணியாற்றினார் மானிங்.
ஆயிரக்கணக்கான அமெரிக்க ரகசியங்களை விக்கிலீக்ஸிற்கு ரகசியமாக கசியச் செய்ததற்காக 2010-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். எதிரிக்கு உதவுதல், தேசப்பாதுகாப்பு தொடர்பான தகவலகளை திருடுதல் உள்பட 22 குற்றங்கள் மானிங்கின் மீது சுமத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment