பக்கங்கள்

Monday, February 27, 2012

குஜராத்:இனப் படுகொலையில் பலியானவர்களுக்கு இறப்பு சான்றிதழ் கூட கிடைக்காத அவலம் – அன்ஹாத் மாநாட்டில் தகவல்


அஹ்மதாபாத்: முதலமைச்சர் மோடியால் ‘வைப்ரண்ட் ஸ்டேட்’ என புகழாரம் சூட்டப்பட்டு அதற்கு பெரும்பான்மை மக்கள் பக்கவாத்தியம் வாசிக்கும் குஜராத் மாநிலத்தில், 2002 குஜராத் இனப் படுகொலையின் போது நரோடா பாட்டியாவில் நடத்தப்பட்ட கூட்டுப் படுகொலையில் பலியானவர்களின் இறப்பு சான்றிதழ் கூட கிடைக்காமல் அவர்களது உறவினர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
நூர்ஜஹான் அன்சாரி, மதினா முஸ்தாக் ஷேக் மற்றும் பலரின் போராட்டங்களையும் உறுதியையும் சிறப்பிக்கும் முகமாக அன்ஹாத் அமைப்பு பாராட்டுவிழா ஒன்றை நடத்தியது. விழாவின் இரண்டாவது நாள் போராட்டத்தின் பத்து ஆண்டுகள் உறுதியை நினைவுகூறும் விதமாக ‘தஸ்தக்’ என்ற பெயரில்  ‘அமைதியான பெரும்பான்மை பேசுகிறது’ தலைப்பில் நிகழ்ச்சியொன்று நடந்தது.
நிகழ்ச்சியின்போது பேசிய அன்ஹாதை வழிநடத்தும் ஷப்னம் ஹாஷ்மி கூறுகையில், “மக்களை ஒன்றுபடுத்தவும், உண்மையை நிலைநாட்ட சமூக நல்லிணக்கத்திற்கான செய்தியை பரவச் செய்வதற்கும் தஸ்தக் நிகழ்ச்சி ஏற்பாடுச் செய்யப்பட்டது. ஏனெனில் நீதி என்பது இம்மாநிலத்தின் அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கான தேவையாகும்” என்று அவர் கூறினார்.
காந்திய மற்றும் சூஃபி பாரம்பரிய கொள்கைகள் மூலம் அன்பை பரப்பி மக்களின் இதயங்களை வெல்வதற்காகவே தஸ்தக் என்று பெயரிடப்பட்டது என்று ஹாஷ்மி தெரிவித்தார்.
தஸ்தக்-2002 ஆம் ஆண்டு இனப் படுகொலையை தொடர்ந்து வந்த 10 ஆண்டுகளின் நிகழ்வுகளை நினைவுக் கூறவும், குஜராத்தில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உண்மைகளை புரியவைத்து அவர்களை ஒன்றிணைத்து அதிகார வர்க்கத்தின் கதவுகளை தட்டவும், அவர்களின் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடவும் நடத்தப்படுவதாகும் என்று ஹாஷ்மி மேலும் கூறினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் மனோஜ் ஷர்மா என்ற இளைஞர் கூறுகையில், “கட்டமைக்கப்பட்ட வெறுப்புணர்வு பிரச்சாரம் குஜராத்தில் நடத்தப்படுவதன் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு பிரித்து வைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்களைப் பற்றி  பெரும்பான்மையான மக்கள் அக்கறைக் கொள்வதில்லை. அவர்களுக்கு கடன் கிடைப்பதில்லை. அவர்கள் சிந்தனை, நடைமுறை ரீதியாக இரண்டாந்தர குடிமக்களாக பெரும்பான்மை மக்களால் நடத்தப்படுகின்றனர். உண்மையில் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை முஸ்லிம் குழந்தைகளுடன் விளையாடவோ, நட்பு கொள்ளவோ அனுமதிப்பதில்லை. ஒருமுறை எனக்கு நடந்த சம்பவங்களின் உண்மைகளை விளக்கி சொன்னபோது அதிர்ந்து போனேன். அதன் பிறகு முஸ்லிம்களுடன் நட்பு வைத்துக் கொண்டேன், என்னுடைய வீட்டுக்கும் அழைத்து வந்து என்னுடைய பெற்றோரிடம் முஸ்லிம்களிடம் நாம் நடந்துகொள்ளும் முறை சரியல்ல என்பதை புரியவைத்தேன்” என்று கூறுகிறார்.
கல்வியாளரும், எழுத்தாளருமான ப்ரீத்தி தாஸ் கூறுகையில், ‘குஜராத் மக்கள் அச்சப்படவில்லையெனில், அவர்கள் வித்தியாசமானவர்கள், படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு என்ன நேர்ந்தது என்று தெரிந்துகொள்ள அவர்கள் விரும்பவில்லை. ஏன், எதற்கு, எங்கு, எப்படி நடந்தது என்ற கேள்விகள் கேட்க அவர்கள் விரும்பவில்லை. சரி.. விடு, போனால் போகட்டும் என்ற மனப்பான்மையில் இருக்கின்றனர். ஜனநாயகத்தின் முக்கிய தூணாக கருதப்படும் தேசிய ஊடகங்கள் தனது பங்கை உரிய முறையில் ஆற்றவில்லை. அவை தங்களை மாற்றி பல வருடங்கள் ஆகிவிட்டன’ என தெரிவித்த ப்ரீத்தி 2002ல் நடந்தது ஒரு திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு நிகழ்வு என்று கூறினார்.
முக்கிய ஊடகங்களின் மனப்பாங்கை தான் விரும்பவில்லை என்று கூறும் ப்ரீத்தி, நடுநிலையாக செய்திகளை வெளியிடுவதை குறித்து அவர்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை.
இஷ்ரத் ஜஹான் கொடூரமாக கொலைச் செய்யப்பட்ட நிகழ்வை நாம் கண்டோம். ஆனால் நாம் யாரும் அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மெழுகுவர்த்தியை கொழுத்தவில்லை. உண்மையான பிரச்சனைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. என்றார்.
இதுபோன்று நிகழ்ச்சிக்கு வந்த பல மாற்று மத சகோதரர்களும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

No comments:

Post a Comment