பக்கங்கள்

Wednesday, February 29, 2012

காஸ்ஸாவில் ஊடுருவும் இஸ்ரேலிய போர் விமானம்


காஸ்ஸாவில் ஊடுருவும் இஸ்ரேலிய போர் விமானம்காஸ்ஸா:கடந்த வாரம் மட்டும் மூன்று முறை இஸ்ரேல் போர் விமானம் காஸ்ஸாவில் ஊடுருவியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது.
கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று இஸ்ரேல் போர் விமானத்தின் மூலம் ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகளால் தென் காஸ்ஸாவின் ரஃபா பகுதியில் உள்ள ஒரு சிமென்ட் தொழிற்சாலை பயங்கர சேதம் அடைந்துள்ளது.
இதேபோல் கடந்த வெள்ளிக் கிழமையன்றும் இஸ்ரேல் போர் விமானங்களால் வடக்கு பகுதியில் நடத்திய தாக்குதலில் இரண்டு ஃபலஸ்தீனியர்கள் காயம் அடைந்துள்ளனர்.
கடந்த 2008-டிசம்பர் முதல் 2009-ஜனவரி வரை காஸ்ஸாவில், இஸ்ரேலால் ஏற்படுத்தப்பட்ட போர்த் தாக்குதலில் 1400-க்கும் மேற்ப்பட்ட ஃபலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment