பக்கங்கள்

Wednesday, February 22, 2012

யெமனுக்கு புதிய ஜனாதிபதி தெரிவு அப்துல்லாஹ் ஸாலிஹிக்கு முடிவு


நேற்று யெமனில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுள்ளது. இடம்பெற்ற இத்தேர்தலில் போட்டியிடும் ஒரே வேட்பாளரான உப ஜனாதிபதி அப்துர் ரப்மன்ஸூர் ஹாதி மக்களால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். என்று உத்தியோகபூர்மாற்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது .  உத்தியோகபூர் முடிவு வெளியாக சில நாட்கள் ஆகும் என்று யெமன் செய்திகள் தெரிவித்துள்ளது. யெமன் முன்னால் சர்வாதிகாரி ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் ஸாலிஹிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் அமெரிக்காவின் வழிநடத்தலில் கண்டுகொண்ட உடன்பாட்டுக்கு அமைவாக நேற்று யெமனில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுள்ளது.
தனக்கு மன்னிப்பு வழங்கும் உடன்பாட்டுடன், பதவி விலகுவதற்கு முன்னாள் சர்வாதிகாரி ஸாலிஹ் இணங்கி இருந்தார். தற்போது அவர் அமெரிக்கா சென்று குடியேறியுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றது.
இடம்பெற்ற இத்தேர்தலில் போட்டியிடும் ஒரே வேட்பாளரான உப ஜனாதிபதி அப்துர் ரப் மன்ஸூர் ஹாதி மக்களால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என நம்பப்படுகிறது. தெரிவாகும் புதிய ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் சாலிஹின் இடத்திற்கு நியமிக்கப்படவுள்ளார்.
இத் தேர்தலில் வாக்களிக்கும் முகமாக தலைநகர் சனாவில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்ததாக தெவிக்கப்படுகிறது. இத் தேர்தலை எதிர்த்து கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற வன்முறைகளில் தென் பகுதியிலுள்ள வாக்குச் சாவடி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
அதேசமயம் பிரிவினைவாத தென் இயக்கமும் வட  கிளர்ச்சியாளர்களும் வாக்களிப்பை பகிஷ்கரிக்க மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்த போதும் தேர்தல் அமைதியான முறையில் பெரும்பான்மையான வாக்காளர்களின் ஈடுபாட்டுடன் நிறைவடைந்துள்ளது என்று சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளது .
இந்தத் தேர்தல் முன்னாள் சர்வாதிகாரி அலி அப்துல் லாலிஹின் 33 ஆண்டுகாலஆட்சிக்கு முடிவு கட்டுவதாக அமைந்துள்ளது. புதிய ஜனாதிபதியை தொடர்ந்து புதிய அரசாங்கள் ,மற்றும் யாப்பு என்பன அமைப்பது தொடர்பான நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற தேர்தல் விரைவில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

No comments:

Post a Comment