பக்கங்கள்

Sunday, February 5, 2012

ஈரான் மீதான தடை:அமெரிக்க, ஐரோப்பிய யூனியனுடன் ஒத்துழைக்க முடியாது – ஈராக்


பாக்தாத்:ஈரானின் மீது அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் அறிவித்துள்ள தடைகளுக்கு ஒத்துழைக்க முடியாது என ஈராக் அறிவித்துள்ளது.
ஈரானில் இருந்து பெருமளவில் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் ஈராக்கிற்கு தடை பாதிப்பை ஏற்படுத்தும் என ஈராக்கின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அலி அல் தப்பாகி தெரிவித்துள்ளார்.
தடையில் இருந்து ஈராக்கிற்கு விலக்கு அளிக்ககோரி கடிதம் தாமதமில்லாமல் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படும் என தப்பாகி கூறினார்.
ஈரானுடன் வர்த்தக உறவை எந்நிலையிலும் ஈராக்கினால் துண்டிக்க இயலாது. ஈரான்-அமெரிக்கா தகராறு பிராந்தியத்தில் நிலைமைகளை மோசமாக்குவதை குறித்து மிகவும் வருந்துவதாக தப்பாகி கூறினார்.

No comments:

Post a Comment