பக்கங்கள்

Wednesday, February 29, 2012

சிலிகாஸிஸ்: நிவாரணம் வழங்காத மோடி அரசுக்கு மனித உரிமை கமிஷன் நோட்டீஸ்


CAV1RREW
புதுடெல்லி:சிலிகாஸிஸ் நோயால் மரணித்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்காத மோடி அரசுக்கு தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சிலிகாசிஸ் நோய் என்பது தொழிற்சாலைகளில் சிலிகா துகள்களை பல ஆண்டுகள் தொடர்ந்து நுகர்வதால் ஏற்படுவதாகும். மூச்சுத் திணறல், சளி, இருமல் போன்றவற்றுடன் நோய் முற்றும்போது உயிரிழப்பும் நேரிடும்.
இந்த நோயால் குஜராத் மாநிலத்தில் 238 பேர் இறந்துள்ளனர். அவர்களது குடும்பத்தினருக்கு இழப்பீட்டை வழங்குமாறு கமிஷன் உத்தரவிட்டிருந்தது.
எனினும், பட்டியலிடப்பட்ட 29 நோய்களில் சிலிகாசிஸும் ஒன்று எனவும், இதற்கு நிவாரண உதவி அளித்தால் மற்ற நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கும் அளிக்க வேண்டியிருக்கும் என குஜராத் அரசு பதில் அளித்திருந்தது.
குஜராத் அரசின் இந்த வாதத்தை மனித உரிமை கமிஷன் நிராகரித்துவிட்டது. இந்த விவகாரம் தொடர்பான தனது பரிந்துரை மீதான நடவடிக்கை குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதேபோன்று, மத்தியப் பிரதேசத்தில் சிலிகாசிஸ் நோயால் இறந்தோர் குடும்பங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பது தொடர்பாக அந்த மாநில அரசு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது என கமிஷனின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

No comments:

Post a Comment