பக்கங்கள்

Tuesday, February 21, 2012

ஈரானில் சர்வதேச அணுசக்தி ஏஜன்சி குழு


Senior UN inspectors arrived in Iran
டெஹ்ரான்:அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் ஆய்வாளர்கள் குழு நேற்று காலை டெஹ்ரானுக்கு வருகை தந்துள்ளனர்.
சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின்(ஐ.எ.இ.எ) தலைவர் ஹெர்மன் நக்கேர்ட்ஸ் தலைமையில் இக்குழு ஈரானுக்கு வந்துள்ளது. இவ்வருடம் 2-வது முறையாக அணு சக்தி ஏஜன்சியின் பரிசோதகர்கள் ஈரானுக்கு வருகை தருகின்றனர். முன்னர் ஜனவரி இறுதியில் பரிசோதகர்கள் குழு ஈரானுக்கு வருகை தந்தது.
இரண்டு தினங்கள் சுற்றுப்பயணத்திற்கு பிறகு ஈரான் அதிகாரிகளுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். ஈரானுக்கு புறப்படுவதற்கு முன்பு வியன்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய நக்கேர்ட்ஸ், ’அணுசக்தி திட்டங்கள் குறித்து சந்தேகங்களை களைவது சுற்றுப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்கு கால அவகாசம் தேவைப்படும்’ என்றார்.
பிரான்சு மற்றும் பிரிட்டனுக்கு எண்ணெய் ஏற்றுமதியை ஈரான் நிறுத்திவிட்டு, அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு தயார் என்று ஐரோப்பிய யூனியனுக்கு கடிதம் எழுதியுள்ள சூழலில் ஐ.எ.இ.எ குழு மீண்டும் ஈரானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment