பக்கங்கள்

Tuesday, February 21, 2012

அமெரிக்கா பேச்சுவார்த்தை தயாராக காரணம் தோல்வி: தாலிபான்


இஸ்லாமாபாத்:ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கா தோல்வியை தழுவிய சூழலில் பேச்சு வார்த்தைக்கு தயாரானது என்று பாகிஸ்தானில் தாலிபான் தலைவர் வலியுற்றஹ்மான் மஹ்ஸூத் கூறியுள்ளார்.
அமெரிக்கா தாமாகவே முன்வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. தாலிபான் போராளிகளை அழிக்கும் நோக்கத்துடன் அமெரிக்காவின் தலைமையில் ஆஃப்கானிஸ்தானை ஆக்கிரமித்த மேற்கத்திய சக்திகள் பேச்சுவார்த்தையின் பாதையை நோக்கி வந்துள்ளனர். போராளிகள் சரணடைவார்கள் என அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால்,எதிர்மறையாகவே சம்பவங்கள் நிகழ்ந்தன.
வெளிநாட்டு ராணுவம் தோல்வியை தழுவும் என்று அஞ்சிய அமெரிக்கா, பேச்சுவார்த்தைக்கு தயாராகியுள்ளது. பேச்சுவார்த்தைக்கான பிரதிநிதிகள் என்ற வேடமிடும் அமெரிக்கா, தோல்வியை மறைக்க முயற்சிக்கிறார்கள் என்று வலியுற்றஹ்மான் ப்ரஸ் டி.விக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பாக்.தாலிபான் தலைவர் ஹக்கீமுல்லாஹ் மஹ்ஸூத் அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தியை அவர் மறுத்துள்ளார். ஹக்கீமுல்லாஹ் தற்போதும் போராளிகளுக்கு உத்தரவுகளை பிறப்பிக்கிறார் என்று வலியுற்றஹ்மான் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment