
இஸ்லாமாபாத்:ஆஃப்கானிஸ்தானில் தாலிபான் போராளிகளுக்கு பாகிஸ்தானின் ரகசிய புலனாய்வு ஏஜன்சியான ஐ.எஸ்.ஐ உதவுவதாகவும், ஆஃப்கான் மக்களின் வலுவான ஆதரவு தாலிபானுக்கு கிடைப்பதாகவும் பி.பி.சி கூறுகிறது.
மூத்த தாலிபான் தலைவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து ஐ.எஸ்.ஐக்கு தெரியும் பி.பி.சியின் அறிக்கை கூறுகிறது. ஐ.எஸ்.ஐயும் தாலிபான் உறுப்பினர்களும் இடையே உறவு இருப்பதாக ஏற்கனவே சந்தேகம் உண்டு என பெண்டகனின் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகிறார்.
ஆனால்,இந்த அறிக்கையை அமெரிக்க பாதுகாப்பு துறை பார்க்கவில்லை என கிர்பி கூறுகிறார். 27ஆயிரம் விசாரணைகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட4 ஆயிரம் தாலிபான்களும், அல்காயிதா போராளிகளும் வெளிநாட்டு போராளிகளுடன் நடத்திய உரையாடல் இந்த அறிக்கைக்கு ஆதாரமாகும்.
இஸ்லாமாபாத்தில் ஐ.எஸ்.ஐயின் தலைமையகத்திற்கு அருகே தாலிபான் தலைவர் நஸீருத்தீன் ஹக்கானியின் வீடு இருப்பதாகவும் பி.பி.சி அறிக்கை கூறுகிறது.
No comments:
Post a Comment