Monday, February 13, 2012

இறைத்தூதரை அவமதித்த இளைஞர் சவூதியிடம் ஒப்படைப்பு


கோலாலம்பூர்:இறைத்தூதர் முஹம்மது நபியை குறித்து அவமதிக்கும் விதமாக டிவிட்டரில் கருத்துக்களை வெளியிட்ட சவூதி அரேபியாவைச் சார்ந்த வலைப்பூ பதிவர் கஷ்கரியை மலேசிய அரசு சவூதி அரேபியாவிடம் ஒப்படைத்துள்ளது.
கஷ்கரி ட்விட்டரில் இறைத்தூதரை அவமதிக்கும் கருத்துக்களை வெளியிட்டதை தொடர்ந்து எதிர்ப்பு வலுத்தது. இதனைத் தொடர்ந்து அவர் மலேசியாவுக்கு சென்றார். இந்நிலையில் அண்மையில் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டார். சவூதியின் கோரிக்கையின் அடிப்படையில் கஷ்கரியை அந்நாட்டு அரசிடம் ஒப்படைத்ததாகவும், நாட்டில் இதற்கான சட்டம் அமுலில் உள்ளதாகவும் மலேசிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
சவூதி அரேபியாவிடம் ஒப்படைத்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்பதை அறிந்தே அந்நாட்டிடம் ஒப்படைத்த மலேசிய அரசுக்கு ஆம்னஸ்டி இண்டர்நேசனலும், ஹியூமன் ரைட்ஸ் வாட்சும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதேவேளையில், கஷ்கரியை ஒப்படைப்பதை தடைச்செய்யும் நீதிமன்ற உத்தரவும் அமுலில் இருக்கும் சூழலில் அரசின் நடவடிக்கை சட்டவிரோதம் என வழக்கறிஞர் முஹம்மது ஆஃபிக் முஹம்மது நூர் குற்றம் சாட்டியுள்ளார்.

No comments:

Post a Comment