
நைரோபி:ஆஃப்ரிக்காவின் ஜிபூட்டியில் அமெரிக்காவின் ராணுவ விமானம் ஒன்று தகர்ந்து விழுந்து நொறுங்கியதில் 4 ராணுவ வீரர்கள் பலியானார்கள் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் உறுதிச் செய்துள்ளன.
ஜிபூட்டியில் அமெரிக்காவின் ராணுவ தளமான கேம்ப் லெமோனியருக்கு அருகாமையில் விமானம் தகர்ந்து வீழ்ந்துள்ளது. உளவுவேலை உள்பட சிறப்பு பணிகளுக்காக அமெரிக்க ராணுவம் உபயோகிக்கும் யு-28ஏ என்ற விமானம்தான் விபத்தில் சிக்கியுள்ளது. விபத்துக் காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பலியானவர்களின் விபரங்களை பெண்டகன் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment