Tuesday, February 14, 2012

டெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடி​ப்பு: 4 பேர் காயம்

The blast in New Delhiபுதுடெல்லி:டெல்லியில் இஸ்ரேல் தூதரக அதிகாரியின் காரில் குண்டுவெடித்தது. இதில் தூதரக பணியாளர்கள் உள்பட நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
மதியம் 3.15 மணியளவில் டெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே காரில் குண்டுவெடித்தது. கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதலில் தகவல் வெளியானது. ஆனால், பின்னர் விபத்து நடந்த இடத்தில் கிடைத்த வெடிப்பொருட்களின் சிதறல்கள்களை கண்டுபிடித்துள்ளதாக போலீசாரும், தூதரக வட்டாரங்களும் தெரிவித்துள்ளன.
குண்டுவெடிப்பில் கார் முற்றிலும் சேதமடைந்தது. சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து பிரதமர் மன்மோகன்சிங்கின் இல்லம் 200 மீட்டர் தொலைவில் உள்ளது.
இதனிடையே, ஜார்ஜியாவிலும் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு குண்டு வைக்கப்பட்டிருந்தது. அதனை அதிகாரிகள் கண்டுபிடித்து அப்புறப்படுத்தினர்.

No comments:

Post a Comment