
போபால்:தகவல் அறியும் உரிமை ஆர்வலர் ஷஹ்லா மசூத் சுட்டுக் கொலைச் செய்யப்பட்ட வழக்கில் பெண் உள்பட 3 பேரை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கட்டிட கலை நிபுணரான ஷாஹிதா பர்வேஸ் மற்றும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஷஹ்லாவை கொலைச் செய்ய கூலிப்படைக்கு பணம் கொடுத்ததை ஷாஹிதா ஒப்புக்கொண்டதாக சி.பி.ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களை புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாக சி.பி.ஐ செய்தி தொடர்பாளர் தாரிணி மிஸ்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஷஹ்லாவுடன், ஷாகிதாவுக்கு இருந்த தனிப்பட்ட பகையே இக்கொலைக்கு காரணமாகும்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி போபால் நகரில் ஷஹ்லா சுட்டுக் கொல்லப்பட்டார். பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக யாரும் சாட்சியமளிக்க முன்வராததால், இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
தகவல் கொடுப்போருக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. பிறகு ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டது.
No comments:
Post a Comment